இலங்கையில் ஆசிரியைக்கு நடந்த கொடூரம்!

பொலன்னறுவை நிசங்க மல்லபுர பகுதியில் சுமார் ஒன்றரை மாதங்களாக காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் ஆசிரியை ஒருவரை அவரின் கணவரே கொலை செயது வீசியதாக குறித்த ஆசிரியையின் கணவர் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய குறித்த ஆசிரியையை கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காணவில்லை என குறித்த நபர் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், விசாரணைகளை ஆரம்பித்த காவல் துறையினர் கணவர் மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையிலேயே தனது மனைவியை தாமே கொலை செய்ததாக காவல் நிலையத்தில் சாட்சியமளித்துள்ளார்.
தனது மனைவியுடன் வாய் தர்க்கம் அதிகரித்ததாகவும், அதனை தொடர்ந்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், பின்னர் மனைவியின் சடலத்தினை மொறகஹகந்த நீர்தேக்கத்திற்கு அருகில் வீசியதாகவும் சாட்சியமளித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Allgemein