நவுரு தடுப்பு முகாமில் 12 வயது சிறுவன் உண்ணாவிரதப் போராட்டம்!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய நிலையில் நவுரு தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 12 வயது சிறுவன் ஒருவன் இரு ஆண்டுகளுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலினை அங்குள்ள மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சிறுவன் பெற்றோர் மற்றும் சகோதரியுடன் கடந்த நான்கு வருடங்களாக நவுரு தீவில் தடுப்பில் உள்ளார்.

குறித்த ஈரானிய சிறுவனின் நிலமை மிகுந்த கவலைக்கிடமாக மாறியுள்ளதாகவும், அவனை இந்த நிலையிலும் அவுஸ்திரேலியாவுக்குள் கொண்டு சென்று மருத்துவ சிகிச்சையினை அளிப்பதற்கு குடிவரவுத்துறை மறுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சிறுவனின் குடும்பம் அமெரிக்காவில் குடியேறுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட பட்டியலில் அடங்கியிருந்தனர்.

இருப்பினும் அதிலும் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் கூறப்படுகிறது.

ஈரான் தஞ்சக்கோரிக்கையாளர்கள் பெரும்பாலானவர்களின் கோரிக்கை இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

உலகச்செய்திகள்