August 18, 2022

செல்விஅபிநஜா அரியரட்ணம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 14.08.2018

வன்னி உறவுகளுக்கு பல்வேறு உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வரும் வானம்பாடி கரோக்கி இசை இயக்குனர் அன்பான உள்ளம் கெங்காதரன் அரியரட்ணம் அண்ணா அவர்களின் செல்வப்புதல்வி அபிநஜா அவர்களின் பிறந்த நாளாகிய 14.08.2018 இன்றய நாளில் வன்னியில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்திற்கு மாணவர்களின் கல்வியை மேலும் சிறப்பாக வேண்டும்
என்ற உயர்ந்த சிந்தனையில் அவர்களின்
கல்வி வளர்ச்சிக்கு 40000 ஆயிரம் ரூபா
உபகரணங்கள் வழங்கி வைத்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு உதவிகளை வழங்கி வரும் இவர்கள் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்ந்திட இறைவனிடம் பிராத்தணை செய்வோம். ஒவ்வொரு ஆண்டும்
புதுபுது சொந்தங்களுடன்,
புதுபுது கனவுகளுடன்
உன்னை விரும்புவோரெல்லாம்
உன்னை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீ பிறந்த இந்த நாள்.
இன்று உன் வயது மட்டுமல்ல,
உன் கனவுகள், ஆசைகள்,
பொறுப்புகள், போன்றவையும் கூடுகிறது…,
அவைகளெல்லாம்
உனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல்
இனி வரும்
அனைத்து ஆண்டுகளும்
நிறைவேறிட வாழ்த்துகிறேன்

குமாரு. யோகேஸ்