தமிழக மீனவர்கள் 27 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

நெடுந்தீவுக்கு தென் கிழக்கே இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 27 தமிழக மீனவர்களை கைது கடற்படையினர் கைது செய்தனர்.
அத்துடன் நான்கு நாட்டு படகை பறிமுதல் செய்து காரை நகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரனை நடத்தினர்.
விசாரணையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கூறல் மீன்கள் அதிகளவில் இந்த பகுதி இருந்ததால் அதனை பிடித்து கொண்டிருந்த போது
காற்றின் வேகம் காரணமாக எல்லைதாண்டி வந்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
விசாரனைக்கு பின்னர் இன்று அனைவரையும் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இலங்கை கடற்படை வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

உலகச்செய்திகள்