August 13, 2022

தங்க பிஸ்கட்டுக்களை கடத்திய இருவருக்கு நேர்ந்த கதி!-

ஒரு கிலோகிராம் நிறையுடைய 10 தங்க பிஸ்கட்களை சிங்கப்பூரில் இருந்து கடத்திவந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்க பிஸ்கட்களின் பெறுமதி சுமார் 65 இலட்சம் ரூபாய் என்று சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.
இருவரும் நேற்று இரவு 11 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் யூ.எல். 309 மற்றும் யூ.எல். 124 என்ற விமானங்களில் இலங்கைக்கு வந்துள்ளனர்.
மகபாகே பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரும், கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.