நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்டமைப்புக்கு மிரட்டல்

 

நாடாளுமன்றத்தின் ஜனநாயக கட்டமைப்புகள் மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடாளுமன்றின் ஜனநாயக கட்டமைப்புகள் முழுமையாக மீறப்பட்டுள்ளன. 16 பேர் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
6 பேர் கொண்ட மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிர்கட்சி கொறடா பதவி வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் பெரும்பான்மை கொண்ட எமக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரின் கருத்தை நாம் எதிர்பார்த்துள்ளதாக கூறுகின்றனர். எமக்கு சபாநாயகரின் பதிலே வேண்டும்.
சபாநாயகருக்கு ஒன்றை குறிப்பிடுன்றோம். அரசியல் கட்சிகளுக்கு அடிபணியாமல் நடுநிலையாக எமக்கு ஒரு பதிலை வழங்குங்கள்.
சபாநாயகர் குறித்து எமது மனதில் ஒரு நிலைப்பாடு இருந்தது. அண்மைக் காலமாக அது குறைவடைந்து வருகின்றது. அதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் செயற்படாமல் எமக்கு உரிய தீர்ப்பு வழங்க வேண்டும்.
நாடாளுமன்றத்தை போல கொழும்பு மாநகர சபையிலும் காணப்படுகின்றது. கொழும்பு மாநகரசபையின் எதிர்கட்சி தலைவர் பதவியை அரசாங்கம் எடுத்துக்கொள்ள முயற்சிக்கின்றது“ என தெரிவித்துள்ளார்.

Allgemein