விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு!

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஆறு மாதங்களிற்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய கவுன்சில் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்காக குறிப்பிட்ட நபர்கள் மற்றும் அமைப்புகளிற்கு எதிரான குறிப்பிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விதிமுறைகளின் கீழ் ஐரோப்பிய ஓன்றியம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
விடுதலைப்புலிகளால் தொடர்ந்தும் ஆபத்து உள்ளது என்பதை ஐரோப்பிய ஓன்றியத்தின் 28 உறுப்புநாடுகளும் ஏற்றுக்கொள்ள செய்துள்ளோம் என பிரசல்ஸிற்கான இலங்கையின் தூதுவர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார்.
பிரசல்ஸில் தொடர்ச்சியாக சந்திக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களின் கருத்துக்களை அதிகாரிகள் உரிய வடிவத்தில் பின்பற்றுவதை தூதரகம் உறுதி செய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வருடம் மார்ச் மாதம் ஐரோப்பிய கவுன்சில் மீண்டும் விடுதலைப்புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்த்திருந்தது.

தாயகச்செய்திகள்