சர்வதேச நீதிபதிகளுக்கு இலங்கைக்குள் இடமில்லை- ஜனாதிபதி மீண்டும் உறுதி

இலங்கையில் போருக்குப் பிந்திய சம்பவங்கள் தொடர்பான விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார்.

எழுச்சிபெறும் பொலன்னறுவை எனும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பொலன்னறுவையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி, ”நாட்டை பிளவுபடுத்தும் விதமாக நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் செயற்பட்டதில்லை. அதேபோன்று பிறர் நாட்டை பிளவுபடுத்தவும் நாம் அனுமதித்ததில்லை.
இதேவேளை, சர்வதேசத்தின் அழுத்தத்தை எதிர்கொண்டிருக்கும் எமது இராணுவ வீரர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
மின்சார நாற்காலி, சர்வதேச நீதிமன்றங்கள் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் போன்ற அழுத்தங்கள் இனி இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Allgemein