August 8, 2022

கனடாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட தமிழர்கள்!!

கனடா ஸ்காபுரோ பகுதியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி கடத்திய குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 20 குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞர்கள் பயணித்த வாகனத்தில் இருந்து கொகெய்ன் மற்றும் சக்தி வாய்ந்த துப்பாக்கி ஒன்று ஸ்காபுரோ போக்குவரத்து நிறுத்தத்தில் பொலிசார் கண்டுபிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சுஜன் பாலசுப்ரமணியம் என்ற 19 வயது தமிழ் இளைஞன் மற்றும் Jaspal Bhatti என்ற 22 வயது இளைஞனும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.