கட்டைப் பஞ்சாயத்து கந்துவட்டி களமாகும் யாழ் மாநகரசபை

யாழ் மாநகரசபையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கட்டைப் பஞ்சாயத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில் யாழ் மாநகரசபை எல்லைக்குட்டபட்ட முக்கிய இடங்களில் யாரேனும் புகைப்படம் எடுப்பதாயின் கட்டணம் வசூலிக்கும் கந்துவட்டி அறவீட்டுத்திட்டத்தையும் யாழ் மாநகரசபை ஆரம்பித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்குமுன் எங்கள் வட்டாரத்திற்குள் வந்து வேலைசெய்யாதீர்கள் என சபையின் ஏனைக கட்சிகளின் உறுப்பினர்களுக்கு முன்னாள் ஆயுதக் குழுக்களான புளொட் அமைப்பின் உறுப்பினர் தர்சானந் மற்றும் ரெலோ உறுப்பினரும் துணை முதல்வருமான தீசன் ஆகியோரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. அவை தொடா்பில் இன்று சபையில் பெரும் விவாதமும் நடந்தேறியது.

இந்நிலையில் யாழ் மாநகரசபைக்குட்பட்ட பண்ணைக்கடற்கரைப்பகுதியில் யாரேனும் புகைப்படம் எடுப்பதாயின் மாநகசபைக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விளம்பரப்பலகை தமிழரசுக் கட்சியின் யாழ் மாநகர முதல்வரின் ஏற்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விளம்பரப்பலகையில் வீடியோ படம் எடுப்பதாயின் 500 ரூபாவும் புகைப்படம் எடுப்பதாயின் 250 ரூபாவும் சபைக்கு கட்டவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது

தாயகச்செய்திகள்