யாழ் தென்மராட்சி பகுதியில் மடக்கிப் பிடிபட்ட இளைஞர் குழு

தென்மராட்சி பகுதியில் மோதலுக்கு சென்ற 13 இளைஞர்களை பளை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.
சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் தம்மை ” ஐ ” குழு எனவும் ” சவா ” குழு எனவும் அடையாளப்படுத்தி கொண்டு வாள் வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மாலை 4 மணியளவில் எழுதுமட்டுவாள் பகுதியில் கோஸ்டி மோதல் ஒன்றுக்கு தயாராக வாள்கள் , இரும்பு கம்பிகள் . பெல்லுகளுடன் 13 இளைஞர்கள் ” வடி” ரக வாகனத்தில் சென்றுள்ளனர்.
இளைஞர்கள் கோஸ்டி மோதலுக்கு தயாராக எழுமட்டுவாழ் பகுதிக்கு வருகின்றனர் எனும் இரகசிய தகவல் கொடிகாமப் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றதை அடுத்து, இளைஞர்களை மடக்கி பிடிக்க கொடிகாம பொலிஸார் எழுமட்டுவாழ் பகுதியில் தயார் நிலையில் இருந்த போது , பொலிஸாரை கொண்ட இளைஞர் குழு வாகனத்தில் மருதங்கேணி பகுதியூடாக தப்பி சென்றுள்ளனர்.
அது குறித்து பளை பொலிஸாருக்கு, கொடிகாம பொலிஸார் அறிவித்ததை அடுத்து , பளை பொலிசார் மருதங்கேணியில் உள்ள பளை பொலிசாரின் காவலரணுக்கு அறிவித்துள்ளனர். அதனை அடுத்து மருதங்கேணி காவலரணில் தயார் நிலையில் இருந்த பளை பொலிஸார் இளைஞர்களின் வாகனத்தை மடக்கி பிடித்தனர்.

வாகனத்தில் இருந்த 13 இளைஞர்களையும் கைது செய்தனர். வாகனத்தில் இருந்து வாள்கள் , இரும்பு கம்பிகள் , பொல்லுகள் என்பவற்றையும் மீட்டுள்ளனர்.

தாயகச்செய்திகள்