சாப்பாட்டுக்கடை திறப்பு விழா: முண்டியத்த தமிழரசுக் கட்சி!

தொண்டராசிரியர்களை இடைநடுவில் கைவிட்டு தமிழரசு தலைவர்கள் சாவகச்சேரியில் சப்பாட்டுக்கடையினை திறந்துவைக்க ஓடோடிச்சென்ற பரிதாபம் நேற்று நடைபெற்றிருந்தது.

நேற்று யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் வைத்து தொண்டர் ஆசிரியர்கள் 457 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்வுக்கு பிரதமதர் ரணில் விக்கிரமசிங்க,கல்வி அமைச்சர் அகிலவிரஜ், நிதியமைச்சர் மங்கள சமரவீர் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை,சரா,சுமந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களோடு மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை தலைவர்கள் உறுப்பினர்கள் எல்லோரும் வந்து கூடியிருந்தர்கள்.

சரியாக 10.30 இற்கு ரணிலும் வந்து சேர்ந்தார் நிகழ்வு தொடங்கியது. எல்லோரும் ரணிலுக்கு பக்கத்தில வருவதற்கு முண்டியடித்து தள்ளுப்பட்டு ஒருவாறு முன்வரிசை ஆசனங்களில் உட்காந்து கொண்டனர். மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரவேற்புரை,முதலமைச்சர் உரை,ரணில் உரை இத்தோடு உரைகள் முடிய நிகழ்வுக்கு வந்திருந்த அதிதிகள் எல்லோரையும் மேடைக்கு அழைத்து அவர்கள் முன்னிலையில் ஒரு பத்து பேருக்கு ரணில் நியமனக்கடிதங்களை வழங்கிவிட்டு தான் போகப்போகிறேன் மிகுதியை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று விழா ஏற்பாட்டுக்குழுவிடம் சொல்லிவிடடு; அவசரமாக கிழம்பிவிட்டார்.

பிரதமர் ரணிலும்,அமைச்சர்களும் கிழம்பிப் போகின்ற அதே வேகத்தில் முன்வரிசை ஆசனங்களில் இருந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் , மாகாணசபை உறுப்பினர்கள்,பிரதேசசபை உறுப்பினரகள்,தவிசாளர்கள் என்று எல்லோருமே புரப்பட்டுச்சென்று விட்டனர். நிகழ்வு அத்துடன் முடிந்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு செய்தி சேகரிக்க வந்திருந்த ஊடகவியலாளர்களும் கிழம்பியிருந்தனர்.

கூட்டமாக எல்லோரும் கிழம்பியதைப் பார்க்கும் போது வேறு எங்கோ இன்னொரு நிகழ்வு இருக்கும் என தொண்டராசிரியர்கள் சமாதானப்பட்டுக்கொண்டனர்.பின்னர் தான் புரிந்தது அத்தனை பேரும் நிகழ்வை இடை நடுவில் விட்டுவிட்டு தனியார் ஒருவரின் சாப்பாட்டுக்கடை திறப்பு விழாவில் சாப்பிடுவதற்காக ஓடியிருந்தமை தெரியவந்துள்ளது.

அடுத்த மாகாணசபை தேர்தலில் போட்டியிட கனடா நாட்டு பவர் ஸ்ரார் என்றழைக்கப்படும் நபரொருவர் ஓடோடி திரிகின்றார்.தமிழரசு பத்திரிகை,இணையமென கடைவிரித்து தமிழரசு அடுத்த தலைவர் மாவை சேனாதிராசாவின் மகனின் உதவியாளராக திரியும் நபரொருவரது ஏற்பாட்டில் சாப்பாட்டுக்கடை திறப்பு விழா நடைபெற்றிருந்ததாக தெரியவருகின்றது.