புலிகளுக்கு மீண்டும் தலைதூக்க சந்தர்ப்பம் அளிக்க போவதில்லையாம் -நவீன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்காது என அந்த கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க உறுதிபட தெரிவித்தார்.

மேலும், நவீன் திசாநாயக்க மற்றும் சஜித் பிரேதமதாச போன்றோரும் மீண்டும் புலிகளுக்கு தலைதூக்க சந்தர்ப்பம் அளிக்க போவதில்லை. ஆனால் இன்று வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற ஐ.தே.க முனைவதாக பொய் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறான பொய்யான தகவல்களை எனது அரசியல் வாழ்வில் இதுவரை கேட்டதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஹட்டன், கினிகத்தேனை நகரில் இன்று (22) காலை 11 மணியளவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், தனது கட்சி ஒரு போதும் ஆணையிரவை விட்டுக்கொடுக்கவில்லை. குறிப்பாக சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியிலேயே ஆணையிரவு விட்டுக்கொடுத்தாக தெரிவித்த அவர், அவ்வாறு எந்தவொரு பகுதியையும் இதுவரை கொடுத்ததும் இல்லை எனவும் அவ்வாறு கொடுக்க போவது இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எப்போதும் இராணுவ வீரர்களை சக்திமயப்படுத்தி அவர்களுக்காக முன்னிற்ற கட்சி எனவும், ஐக்கிய தேசியக் கட்சிக்காகவே இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர், எனவே அவர்களை பாதுகாக்கவே நாம் எப்போதும் கடமைபட்டுள்ளோம்.

தற்போது மத்திய வங்கியில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இவ்வாறான பிரச்சினைகள் ராஜபக்ஷ காலத்தில் ஏற்பட்டிருந்தால் அது மூடி மறைக்கப்பட்டிருக்கும் எனவும், ஆனால் தற்போதைய ஜனாதிபதி அது தொடர்பில் விசேட ஆணை குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றார்.

எனவே இதுவே தற்போதைய மாற்றம் எனவும், தற்போதைய சூழ்நிலையில் எவராயினும், எந்தவொரு ஊடகவியலாளருக்கும் அரசாங்கத்தை விமர்சிக்க முடியும் எனவும் சுட்டிக்கட்டினார்.

தற்போது முன்பை போன்று வெள்ளை வான் கடத்தல்கள் இல்லை, லசந்த விக்ரமதுங்க போன்றோர் முன்னைய ஆட்சியில் கொலை செய்யப்பட்டதுடன், எக்னேலிகொட போன்ற ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்.

ஆனால், எமது ஆட்சியில் எந்தவொரு ஊடகவியலாளரும் அச்சுறுத்தப்படுவது இல்லை என குறிப்பிட்ட அவர், முன்பு எந்தனை பேரை கொலை செய்தனர் ஆனால் இன்று நாம் புலிகளுடன் இணைந்து செயற்படுவதாக கூறுவதாகவும் அவர் சுட்டிகாட்டினார்.

அன்று பண்டாரநாயக்க ஆரம்பித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று இல்லாமல் போயுள்ளது, இந்த தொகுதியில் ஆயிரம் பேருக்கு சமூர்த்தியை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியை சீரமைத்துக்கொண்டு 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சரியான ஒரு வேட்பாளரை நிறுத்துவதாகவும் அவர் மேலும் கூறினார்.

Allgemein