நாட்டை ஆட்சி செய்யும் உரிமை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு மட்டுமே இருக்கிறது-சரத்

நாட்டை ஆட்சி செய்யும் உரிமை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு மட்டுமே இருப்பதாக அமைச்சர் பேராசிரியர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். பதுளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதிக முறை நாட்டை ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பத்தில் அமைச்சரவையில் பிரபல பொறுப்புக்களில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்களே இருந்தார்கள் எனவும் அதன் பிரதிபலன் மக்களுக்கு சேவை செய்ததே எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Allgemein