உலகை திரும்பிப்பார்க்க வைத்துள்ள புலம்பெயர் தமிழிச்சி

உலகப்புகழ்பெற்ற ரோலிங் ஸ்டோன்ஸ் (Rolling stones) நிறுவனத்தினரால்தரப்படுத்தப்பட்ட இந்த நுற்றாண்டின் சிறந்த பாடல்கள் வரிசையில்இரண்டாம் இடத்தினைப் பிடித்த „பேப்பர் பிளேனஸ்“ (paper planes) என்னும் பாடலுக்குச் சொந்தக்காரரான மாதங்கி அருள்பிரகாசம் அவர்கள் கடந்துவந்த பாதை, „மாதங்கி, மாயா, எம்.ஐ.ஏ“ என ஆவணப்படமாகவடிவம் பெற்றுள்ளது.
எம்.ஐ.ஏ (M.I.A) என அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம்அவர்களினால் கடந்த 22 வருடங்களாக சேகரிக்கப்பட்ட காணொளிகள், மற்றும் நினைவுப்பதிவுகளின் தொகுப்புக்கள் மூலம், அகதியாகபுலம்பொயர்ந்த தமிழ் சிறுமி, பின்னர் எவ்வாறு உலகம் வியக்கும் பிரபலபாடகியாக உருப்பெற்றார் என்பதை „மாதங்கி, மாயா, எம்.ஐ.ஏ“ என்னும்ஆவணப்படம் மூலம் இயக்குனர் ஸ்டீவ் லோவெரிட்ஜ் (Steve Loveridge) பதிவாக்கியுள்ளார்.
சிறுவயதில் அகதியாக புலம்பெயர்ந்த அனுபவம் முதல் ஈழத்தமிழர்இனவழிப்பு வரை அனைத்து விடயங்களும் மாதங்கி அருள்பிரகாசம்அவர்களால் உலக அரங்கில் பல முறை எடுத்துக்கூறப்பட்டதுடன், அவரின்படைப்புகளிலும் இவை சார்ந்த சாட்சியங்கள் உள்ளடங்கலாக இருக்கும்என்பது குறிப்பிடத்தக்கது.