புத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை

 

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” – நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி நடாத்திய புத்தளத்தை சேர்ந்த முஸ்லீம் சகோதரர் ஜம்சீத் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவரது வீட்டிற்கு சென்ற புலனாய்வுத்துறையினர் வீட்டை படம் எடுத்ததுள்ளனர். குறித்த நேரத்தில் அவர் வீட்டில் இல்லாததால் அவரை புத்தள அலுவலகத்திற்கு அழைத்து வாக்குமூலம் ஒன்றினையும் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாண அலுவலகத்தில் இருந்தே விசாரணைக்கான கட்டளை வந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே தாம் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததாக அவரிடம் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கறுப்பு யூலை நினைவுநாளை முன்னிட்டு அவரது அடுத்த படைப்பான „கறுப்பு யூலையும் நெருப்பு ஈழமும்“ நூல் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாயகச்செய்திகள்