இன்னும் பத்து ஆண்டுகளில் இறந்தவர்கள் மீண்டும் உயிருடன்!!!

இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க வைக்கும் விஞ்ஞானம் இன்னும் பத்து ஆண்டுகளில் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்திலுள்ள கிரையோகெனிக்ஸ் (Cryogenics) என்னும் கல்வி நிறுவனம் இறந்தவர்களை உயிர்ப்பிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்து வருகின்றனர்.எதிர்வரும் பத்து ஆண்டுகளில் விஞ்ஞானிகள் பதப்படுத்தி வைத்துள்ள உடல்களுக்கு உயிர்கொடுக்க வாய்ப்புள்ளதாக கிரையோகெனிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் டென்னிஸ் கோவல்ஸ்கி கூறியுள்ளார்.

ஸ்டெம் செல்ஸ் தொழிநுட்பத்தின் வளர்ச்சியின் வேகம் எவ்வளவு வேகத்திற்கு அதிகரிக்கின்றதோ அதன் வேகத்தில் உடலுக்கு உயர் கொடுக்கும் காலமும் மிக விரைவில் ஏற்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.அந்த வகையில் சுமார் 2000 இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க குறித்த நிறுவனம் உப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் 160 உடல்களைப் பதப்படுத்தி வைத்துள்ளது.ஆனாலும், உடலில் உள்ள செல்களை புதுப்பிக்கும் தொழிநுட்பத்தைக் கண்டுபிடித்தால் மட்டுமே இறந்தவரை உயிருடன் கொண்டுவர முடியும் என்று கூறப்படுகின்றது. இதனால் இன்னும் நூற்றாண்டுகள் கூட ஆகலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Allgemein