வெற்றியுடன் திரும்பும் வீரர்களை வரவேற்க பரிசில் ‘வெற்றி வளைவு’.

வெற்றியுடன் திரும்பும் வீரர்களை வரவேற்க பரிசில் ஒரு இடம் உண்டு. அதன் பெயர் Arc de Triomphe. தமிழில் ‘வெற்றி வளைவு’.
182 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பிரான்சுக்காக உயிர் நீத்த பலநூறு இராணுவவீரர்களின் பெயர்கள் இதில் எழுதப்பட்டுள்ளது.
1944 இல் ஜெர்மனியிடம் இருந்து பிரான்ஸை மீட்ட வீரர்களை இங்கு வைத்துதான் மக்கள் வரவேற்றுக் கொண்டாடினர்.
இன்று ரஷ்யாவில் இருந்து வெற்றியுடன் திரும்பும் ‘நீலத்தினரை’ வரவேற்க மக்கள் அங்கே குவிந்துள்ளார்கள்.
பரிசின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த வெற்றிவளைவில் 12 அவெனியூக்கள் சங்கமிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு