யாழ்.கோட்டையில் வெடித்தது போராட்டம்.


யாழ்ப்பாணம் கோட்டைப்பகுதியில் இராணுவ முகாம் அமைப்பதற்குக் காணி வழங்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08-06-2018) பிற்பகல்-02 மணி முதல் யாழ். கோட்டையின் தென்புற நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
யாழ் கோட்டையில் மீண்டும் நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்கு நிலம் வழங்கப்ப்பட்டதை எதிர்த்து 08/07/18 அன்றி யாழ் கோட்டை பகுதியில் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் திரு Selvarajah Kajendren அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்து.
?தமிழர் தாயகத்தில் இராணுவமயமாக்கலுக்கு எதிராக எமது கட்சி எப்போதும் குரல் கொடுக்கும்.
?யாழ் கோட்டை ஒரு தொல்லியல் சின்னம்.
இனவாத நோக்கிலேயே தொல்லியல் திணைக்களம் சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவ முகாம் அமைப்பதற்கு தொல்லியல் திணைக்களம் அனுமதித்திருப்பது இனவாத நோக்கே
?கோட்டையின் பழமைவாய்ந்த இராணி மாளிகை தூண்கள் இராணுவத்தால் இடிக்கப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
இது தொல்லியல் விதிகளுக்கு முற்றிலும் எதிரானது.
?கடந்த வருடங்களில் மட்டக்களப்பை சேர்ந்த ஒரு தமிழ் மாணவி , சிகிரியாவிற்கு சுற்றுலா சென்ற வேளை தொல்லியல் சின்னங்கள் பற்றிய அறியாமையால் அந்த சுவரில் தவறுதலாக கீறியமைக்காக அவர் பிணைகூட வழங்கப்படாது சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் தொல்லியல் விதிகளை பேண வேண்டிய தொல்லியல் திணைக்களம், இன்று அந்த தொல்லியல் பகுதியின் கட்டடங்களை இடித்து புதிய கட்டடங்களை அமைக்க சிங்கள இராணுவத்திற்கு அனுமதி அளித்துள்ள

தாயகச்செய்திகள்