ஸ்ரீ லங்காவில் சீனா என்ன செய்கிறதென்று ஆழமாக அவதானிக்கிறோம்!

ஸ்ரீலங்கா சீனாவுடன் இணைந்து முன்னெடுத்து வரும் பொருளாதார திட்டங்களை ஆழமாக அவதானித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்து சமுத்திரத்தில் அதிகரித்து வரும் சீனாவின் நடவடிக்கைகளை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா மற்றும் சீனாவுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்ரீலங்காவின் கடலின் ஒரு பகுதி குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
அத்துடன் ஸ்ரீங்காவில் உள்ள பல திட்டங்கள் மற்றும் கட்டுமானப்பணிகள் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதனால், சீனா தொடர்பில் ஐயப்பாடுகளை இந்தியா வெளிப்படுத்தி வருகிறது.
இந்து மா சமுத்திரத்தின் சீனாவின் பிரசன்னமும் அதிகரித்த நடவடிக்கைகளும், இந்தியாவிற்கு பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா சீனாவுடன் இணைந்து முன்னெடுத்து வரும் பொருளாதார உறவுகள் தொடர்புகளை இந்தியா ஆழமாக அவதானித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில், இந்து மா சமுத்திரத்தில் சீனாவின் பிரசன்னத்தை கட்டுப்படுத்துவதற்கும். கண்கானிப்பதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சீனாவின் நடவடிக்கைகளை தொடர்சியா ஆழமாக கண்காணித்து அதற்குரிய உரிய நடவடிக்கைள் எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சீனாவின் அதிகரித்த நடவடிக்கைகளினால், ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் அயல்நாடுகளுக்கு அறிவுறுத்த வேண்டுமென கூறியுள்ளார்.
ஸ்ரீலங்காவில் சீனாவிகன் பிரசன்னத்தை தொடர்ந்து, இந்தியாவும் தமக்கான இந்து சமுத்திரதத்தில் காத்திரமான பங்கை வகிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த வரவதடன், சினாவுடன் நடவடிக்கைளை ஆழமாக கண்கானிப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள.
இதேவெளை. சீனாவின் நடவடிக்கைகள் தெடர்பில் உர்மட்ட இராஜதந்திரிகளுடனான கலந்துரையாடலல் ஈடுபடவும் அவர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகச்செய்திகள்