பிரான்ஸ்சில்21 வது தமிழர் விளையாட்டு விழா மிகவும் சிறப்பாக (08.07.2018) அன்று நடைபெற்றது!!

 

பிரான்ஸ் புனர்வாழ்வுக்கழகத்தால் நடாத்தப்பட்ட 21 வது தமிழர் விளையாட்டு விழா மிகவும் சிறப்பாக (08.07.2018) அன்று நடைபெற்றது!! பாரிஸின் புறநகர் பகுதியான லூ Bபுஜே திறந்தவெளியில் தாய்மண்ணின் நினைவுகளை தரக்கூடிய வகையில் பல விளையாட்டுகள் அமைந்திருந்தது மட்டுமல்ல தாயக உணவுகளை சுவைத்த வண்ணம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டில் கலந்து கொண்டாடி மகிழ்ந்திருந்தனர்.
கலைநிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் பாரிஸின் முன்னணி இசைக்குழுக்களில் ஒன்றான சுருதி இசைக்குழுவின் இசையில் பல பாடகர்கள் பாடகிகள்,ரசிகர்களை மகிழ்வித்தார்கள்.
அத்துடன் நடனங்கள்,பலகுரல் விநோதம்,பாரிஸ் பாலம் படைப்பகம் வழங்கிய J.A.சேகரனின் „அப்படிவந்தனாங்கள் இப்படி போறம்“ நகைச்சுவை நாடகமும் இடம்பெற்றது.அதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தோழர் உரை நிகழ்த்தினார் பல விபரங்களை பேசினார் அதில் பாலம் படைப்பகத்தின் நாடகம் பற்றியும் அதில் சொல்லப்பட்ட செய்திகளையும் தனது பேச்சில் குறிப்பிட்டு பேசினார்.
வழமை போல இந்தாண்டு (08.07.2018) விளையாட்டு விழாவிலும் பல சிறப்புக்கள் விழாவை மேலும் மெருகூட்டியது.
இன்றைய பொழுது மிகவும் உவகையான பொழுது என்ற நிறைவுடன் எல்லோரும் திறந்தவெளி திடலை விட்டு வெளியேறினர்.
(K.P.L.)(09.07.2018

விளையாட்டுச்செய்திகள்