நல்லூர் முன்றலில் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்!

வவுனியா காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டம் 500ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று நல்லூர் ஆலய சூழலில் உணவுதவிர்ப்பை மேற்கொண்டுவருவதுடன் தியாகி திலீபனின் தூபிக்கு சென்று மலரஞ்சலியும் செலுத்தினர்.

தமிழர் தாயகத்தின் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9.00 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நடைபெறுகின்றது.