சுமந்திரனுக்கு, தமிழர் பகுதியில் பாதுகாப்பு இல்லையா ?

அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவர் ஒன்றும் சிங்களப் பகுதிக்கு சென்று, பிரச்சாரம் செய்யவில்லை. வவுனியா, முல்லைத் தீவு என்று தமிழர் தாயகப் பகுதிகளுக்கு சென்று தான் பிரச்சாரம் நடத்தி வருகிறார். அதற்கு பெரும் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. அப்படி என்றால் இவர் யார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா ?

தமிழர்களுக்காக போராடுகிரேன் என்று கூறும் சுமந்திரனுக்கு, தமிழர் பகுதியில் பாதுகாப்பு இல்லையா ? பல சிங்கள அரசியல்வாதிகளே பாதுகாப்பு எதுவும் இன்றில் தமிழர் பகுதிகளுக்கு வந்து செல்ல, சுமந்திரனுக்கு ஏன் அதிரடிப் படை பாதுகாப்பு கொடுக்கவேண்டும் ?

இதில் இருந்தே இவர் அரசாங்கத்தின் கைக்கூலி என்பது தெளிவாக புரிகிறது அல்லவா. மேலும் சுமந்திரனை வெளிநாட்டு அமைச்சராக நியமிக்க வேண்டும் என்றும். இதனூடாக கதிர்காமர் இடத்தை அவர் நிரப்புவார் என்ற கருத்தும் கூட சிங்களவர் மத்தியில் உள்ளது என்ற பேச்சும் அரசியல்வாதிகள் மத்தியில் அடிபடுகிறது.