யாழில் காணாமல் போன யுவதி பண்டாரவளையில் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளம் யுவதி ஒருவர் பண்டாரவளை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.கடந்த இரண்ட நாட்களுக்கு முன்னர் பெற்றோருக்கு தெரியாமல் காணாமல் போயிருந்த குறித்த யுவதி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.
பண்டாரவளை பிரதேசத்தின் எல்லதொட்ட பிரதேசத்தில் சுற்றிதிரிந்த நிலையில் பண்டாரவளை பொலிஸாரினால் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.யாழ். தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 19 வயதான செல்வத்துரை வனித்தா என்ற யுவதி இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி தனது பெற்றோருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு சென்றுள்ளார். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்தில் பண்டாரவளைக்கு சென்றுள்ளார்.
பின்னர் பண்டாரவளை பிரதேசத்தில் சுற்றிதிரிந்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்தள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Allgemein