ஈழத் தமிழர்களின் மனித எச்சங்கள் கனடாவில் மீட்பு!!

கனடாவில் ஈழத் தமிழர்கள் இருவர் உட்பட்ட 8 பேரின் தொடர் கொலைகள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் காணிகளில் இருந்து பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கனேடிய டொரன்டோ காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக மனித உடல்களைத் தேடி தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக கனேடிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட எட்டுப் பேரில் ஸ்கந்தராஜா நவரட்ணம் (40), கிஷ்ணகுமார் கனகரட்ணம் (37) ஆகிய ஈழத்தமிழர்களும் கொல்லப்பட்டமை இங்கே நினைவூட்டத்தக்கது.

உலகச்செய்திகள்