விஜயகலா விடயத்தில் வாய் திறந்த சம்பந்தன்!

வடக்கு கிழக்கில் பழையவற்றை மீண்டும் மக்கள் மனதில் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

சிறுவர்களும், பெண்களும் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் வடக்கிலே விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூறியிருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் நாட்டில் தமிழ் மக்களிடையே நல்லிணக்கம் மற்றும் சமாதானம் நிலவி வரும் நிலையில், அவருடைய இக் கருத்தானது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் இதன் போது கூறியுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் எதாவது அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும், அதனை விடுத்து இவ்வாறு கருத்து தெரிவிக்க வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Allgemein