விடுதலை புலிகளின் கை ஓங்க வேண்டும்:அரசியல் செய்வதற்காக அல்ல!

பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் விடுதலை புலிகளின் கை ஓங்க வேண்டும் என்று அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியுள்ளார்.மற்றும் இதை வைத்து அரசியல் செய்ய கூடாது என்றும் தெரிவித்தார்.

கண்டி கலவரத்தின் போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா, ரிசாட் ஆகியோர் முஸ்லீம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவேண்டி வரும் என கூறியபோது வாய்மூடி மௌனியாக இருந்த சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப்புலிகளின் கைகள் ஓங்கவேண்டும் என்று கூறியபோது கொதித்தெழுவது எந்த வகையில் நியாயமானது.

இந்த நாட்டில் விடுதலைப் புலிகளின் காலத்தில் வடகிழக்கில் இருந்த பெண்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். அவர்களின் காலத்தில் இவ்வாறு பச்சிளம் பாலகர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்படவில்லை எனவே வடகிழக்கில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் வடகிழக்கில் விடுதலைப் புலிகளின் கை ஓங்கவேண்டும் என்று உணர்ச்சி வசப்பட்டு கூறியுள்ளார்.

இங்கு அவர் விடுதலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும் என்று என்ன நோக்கத்திற்காக சொன்னார் என்பதை பார்க்க வேண்டுமே தவிர அதை வைத்து அரசியல் செய்வது இனவாத கொள்கையே. தொடர்ந்தும் சிங்கள தேசம் இனவாத கொள்ளையுடனேயே பயணிக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு. தென்னிலங்கை அரசியல் வாதிகளுக்கு அரசியல் செய்ய தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் இயக்கம் தேவை என்பதே உண்மை.

Allgemein