வவுனியாவில் கைக்குழந்தையுடன் சென்ற பெண்சங்கிலி பறித்து செல்லப்பட்டுள்ளது.

வவுனியாவில் கைக்குழந்தையுடன் சென்ற குடும்பப் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலி பறித்து செல்லப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிலில் சென்ற இருவர் இதனை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை 4 மணியளவில் லக்சபான வீதி, தோணிக்கல் பகுதியில் வீதியால் நடந்து சென்ற குடும்பப் பெண் அணிந்திருந்த 2 பவுணுக்கு அதிகமான தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிலில் சென்ற நபர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் நின்றவர்களின் உதவியுடன் திருடர்களைப்பிடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பயனளிக்கவில்லை.
இதையடுத்து தனது சங்கிலியை சைக்கிலில் சென்ற அடையாளம் தெரியாத நபர்களினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது