கனடா வரலாற்றிலேயே மிகப்பெரிய குடிவரவு மோசடியாளர் விடுதலை?


கனடிய தேசிய பரோல் வாரியம் Xun (Sunny) Wang என்ற கனடிய வரலாற்றிலேயே மிகப்பெரிய மோசடியாளரை முன்கூட்டிய பரோலில் விடுவிக்க திட்டமிட்டுள்ளது.
கனடிய வரலாற்றிலேயே மிகப்பெரிய குடிவரவு மோசடி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்த இவரை முன்கூட்டிய பரோலில் விடப்பட்டதுடன் 900,000 டொலர்களிற்கும் மேலான தொகையை செலுத்த வேண்டியதில்லை எனவும் அவரது குற்றவியல் நடவடிக்கைகளை குறைக்கவும் போவதாக 2017 நவம்பர் பரோல் சபை முடிவெடுத்துள்ளதாக அறியப்படுகின்றது. விதிக்கப்பட்ட 7ஆண்டுகள் சிறைத்தண்டனையில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே சிறையில் கழித்துள்ளார்.
சிறையில் வாங் கழித்த காலப்பகுதியில் இவரால் ஆபத்தெதும் ஏற்படாதென பரோல் சபை கருதுகின்றது. 1,000ற்கும் மேற்பட்ட மக்களை தவறான கடவுச்சீட்டு உள்ளீடுகளை உபயோகித்தும் போலி வேலை வாய்ப்புக்களை வழங்கியும் இவர்களிற்கு போலியான வீட்டு விலாசங்களை வழங்கியும் 49-வயதுடைய கனடாவிற்குள் அழைத்து வந்துள்ளார்.
இவருக்கு 7-வருடங்கள் சிறை தண்டனை மற்றும் டொலர்கள் 730,837 கனடா வருமானவரி முகாமைக்கும் வரி ஏய்ப்பு பிரிவுக்கு டொலர்கள் 187,901.24-மொத்தமாக 920,000டொலர்களை மத்திய அரசாங்கத்தை ஏமாற்றியதற்காக குற்ற பணமாக செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

உலகச்செய்திகள்