இராட்சியத்தின் அறம்செய் அறக்கட்டளை அமைப்பின் ஏற்பாட்டில் துவிச்சக்கரவண்டி வழப்பட்டது

வீரத்தமிழர் முன்னணி ஐக்கிய இராட்சியத்தின் அறம்செய் அறக்கட்டளை அமைப்பின் ஏற்பாட்டில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றலை ஊக்கப்படுத்தும் வகையில் துவிச்சக்கரவண்டி வழங்கும்; நிகழ்வு முதலைக்குடா கண்ணகி அரங்கில் நடைபெற்றது.

வீரத்தமிழர் முன்னணியின் தலைவர் அ..ஞானசேகரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதலைக்குடா மகாவித்தியாலய அதிபர் பி.தங்கவேல், சமூகஆர்வலர் பொ.கோபாலபிள்ளை, அகரம் அமைப்பின் தலைவர் அகரம் செ.துஜியந்தன் அறம் செய் அமைப்பின் செயற்பாட்டாளர்களான மட்டுநகர் கமலதாஸ், அ.தேகதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

படுவான்கரைப் பிரதேசத்தில் பல்வேறு சமூகசேவையில் ஈடுபட்டுவரும் வீரத்தமிழர் முன்னணி ஐக்கிய இராட்சியம் இப்பகுதியிலுள்ள வறிய மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுக்கும் செயற்பாட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றது.

அந்தவகையில் படுவான்கரைப்பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட கஸ்டப்பிரதேசங்களாக இனங்காணப்பட்ட பதினொரு கிராமங்களில் இருந்து குறிப்பாக 15 கிலோமீற்றருக்கு அப்பால் இருந்து பாடசாலைக்கு சமூகமளிக்கும் வறிய மாணவர்கள் 30 பேருக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தி,:- அகரம் செ.துஜியந்தன்