ஐ.நாவில் குழப்பம் விளைவித்தார்கள் கோத்தபாயவின் ஆதரவாளர்கள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்யை தினம் இடம்பெற்ற பக்க நிகழ்வென்றின் போது ஸ்ரீலங்காவில் இருந்து வந்த சிங்கள இனத்தவர்கள் சிலர் குழப்பம் விளைவித்துள்ளார்கள்.
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக இடம்பெற்ற பக்க நிகழ்வென்றில் பிரபல புலனாய்வு ஊடகவியலாளர் கலம் மக்ரேவால் உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆவணப்படம் ஒன்று திரையிடப்பட்டபோதே இந்த குழப்பம் ஏற்பட்டது.
சிறிலங்கா பூகோள பேரவை என்ற சிங்கள அமைப்பே இந்த குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்.
குறிப்பிட்ட இந்த அமைப்பு முன்நாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் வழிநடாத்தப்படுகின்ற அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.