இலங்கை மூதாட்டி கனடாவில் சாதனை!

கனடா-அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திற்கமைய எழுதப் பெற்ற திருமதி யோகரத்தினம் செல்லையா அவர்களின் “ சிறிய மண்வண்டில்” எனும் நூலினை பேராசிரியர் திரு. பாலசுந்தரம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தற்போது கனடா-அண்ணாமலை பல்கலைக்கழக கலைமாணிப் பட்டம் பெறும் மாணவர்கள் “சிறிய மண்வண்டில்” நூலினை படித்து பயன் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நூலின் ஆசிரியர் திருமதி. யோகரத்தினம் செல்லையா 80 வயதில் கனடா – அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப்பட்டம் பெற்றது ஓர் வரலாற்றுச் சாதனையே!!