இலங்கையில் 80 இணைய ஊடகங்களுக்கு எதிராக விசாரணை – முடக்கவும் ஆலோசனை

அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளும் வகையிலான தகவல்களை பரப்பும் 80 சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இணையங்கள் பற்றிய தகவல் வெளியாகியிருப்பதாக தெரிவித்துள்ள சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன அவற்றுக்கெதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் அமைச்சர் தெரிவிக்கையில்

இவற்றில் சுமார் 40 இணையத்தளங்கள் இனக்குரோதத்தைத் தூண்டும் அடிப்படையில் செயற்படுவதாகவும் கூறினார்.

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் பற்றிய கூகுள் வரைப்படங்களும் கிடைத்துள்ளன. இவற்றின் அடிப்படையில் விரைவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. அவ்வாறான இணையங்ளை முடக்குவது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டுவருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Allgemein