காவிக்கு காட்டும் அக்கறை ஆனந்த சுதாகரின் கருணை மனுவிற்கு காட்டவில்லை

தாயின் இறுதி நிகழ்வில் தந்தையுடன் சிறைசெல்ல முற்பட்டு உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த குழந்தைகளின் தந்தையான ஆனந்த சுதாகரின் விடுதலை தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் இன மத வேறுபாடின்றி நாடுமுழுவதிலிருந்தும் விடுக்கப்பட்டது.

எனினும் ஆனந்த சுதாகரின் விடுதலையில் கள்ள மௌனம் சாதித்துவரும் ரணில் மைத்திரி கூட்டரசு கொலை அச்சுறுத்தல் விடுத்து கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக தெரியவருகின்றது.

இனவாதக் கருத்துக்களை தெரிவித்துவரும் புத்த பிக்குவான ஞானசாரது விடுதலை தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் மிகுந்த அக்கறை செலுத்திவருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கருத்து தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Allgemein