நாடு தழுவிய ரீதியில் வன்முறைகள் வெடிக்கும்: பௌத்த பிக்குகள் எச்சரிக்கை

 

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவிசந்தியா எக்னலிகொடவிற்கு அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கலகொட அத்தே ஞானாசார தேரரை விடுதலை செய்யுமாறுவலியுறுத்தியுள்ள பௌத்த பிக்குகள் தலைமையிலான சிங்கள பௌத்த கடும்போக்குவாதஅமைப்புக்கள் அவர் விடுதலைசெய்யப்படாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் வன்முறைகள்வெடிக்கும் என்று எச்சரித்துள்ளன.

பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானாசாரதேரரை சிறையில் அடைத்துள்ள நிலையில் அவரை சிறையில் வைத்து படுகொலை செய்யவும்திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பொதுபல சேனா, சிங்களராவய, பெவிதி அமைப்பு உள்ளிட்ட பௌத்த பிக்குகள் தலைமையிலானசிங்கள கடும்போக்குவாத அமைப்புக்கள், ஞானாசார தேரருக்குஏதாவது நேர்ந்தால் நாடு தழுவிய ரீதியில் பௌத்த பிக்குகள் மத்தியில்கிளர்ந்தெழுவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.

ஆறு மாதகாலப்பகுதியில் அனுபவித்துமுடிக்கக்கூடிய வகையில் ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்போதுவெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானாசாரதேரரை இன்று சிறைக்கு சென்று பார்வையிட பௌத்த பிக்குகளும் அரசியல்வாதிகளும்சென்றிருந்தனர்.

எனினும் பிவிதுரு ஹெல உறும கட்சியின்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தவிர்ந்த ஏனையவர்களை பார்க்க முடியாது என்று தெரிவித்து ஞானாசாரதேரர் திருப்பி அனுப்பிவைத்துவிட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் அலுவலகப் பேச்சாளர்உபுல்தெனிய தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தன்னை பார்க்கஅனுமதித்ததாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, ஞானாசார தேரர் தெரிவித்ததற்கு அமையவும், நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கிற்கு அமையவும் அவர் சந்தியா எக்னலிகொடவைஅச்சுறுத்தவில்லை என்று கூறினார்.

சந்தியா எக்னலிகொடவை பார்த்து உனது கணவன்ஒரு புலி என்றும்இதனைவிட நீ பிச்சையெடுப்பது நல்லது என்றே ஞானாாசார தேரர்கூறியிருப்பதாகவும், அது மரண அச்சுறுத்தலாக எவ்வாறுஅமையும் என்றும் சட்டத்தரணியான உதய கம்மன்பில விளமக்களித்தார்.

சமரச சபைக்குள் தீரக்கப்பட வேண்டிய ஒருபிரச்சனை இன்று நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு சிறைத்தண்டனை வரைசென்றுள்ளதாகவும் தெரிவித்த உதய கம்மன்பில, காவியுடையில் இருந்தஞானாசார தேரரை, சிறைக்கைதியின் உடையில் இருப்பதைமற்றையவர்க்ள பார்ப்பதை விரும்பாததாலேயே அவர் ஏனையோரை பார்க்க மறுத்துள்ளதாகவும்குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தேசிய அரசாங்கத்தில் இருந்துவெளியேறி சுயாதீன எதிர்கட்சியாக செயற்பட்டுவரும் சுதந்திரக் கட்சியின் 16நாடாளுமன்ற உறுப்பினர் குழுவைச் சேர்ந்த குருநாயகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்தயாசிறி ஜயசேகரவும்இன்றைய தினம் ஞானாசார தேரரை சிறைக்கு சென்று பார்வையிடமுயற்சித்தார். எனினுமம் ஞானாசார தேரர் விரும்பாததால் சிறையிலிருந்து திரும்பியதயாசிறி ஜயசேகர, ஞாானாசார தேரருக்கு விரைவில்பிணை கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டார். சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணி்ல்தலைமையிலான அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியது முதல் சிங்கள மக்களுக்காகவும், பௌத்த மதத்திற்காகவும் உண்மையாக உழைத்துவரும் பௌத்ததலைமை பிக்குகள் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டு வருவதாக ராவனா பலய அமைப்பின் தலைவர் மகால்கந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று ஞானாசாரதேரரை பார்வையிட சென்ற ராவனா பலய அமைப்பின் தலைவர் சத்தாதிஸ்ஸ தேரர் ஏமாற்றதுடன்திரும்பிய போது அங்கிருந்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இநத நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்த, மத்திய வங்கியின் நிதிகளை மோசடி செய்த மற்றும்ஹெரோயின் உட்பட போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டுள்ள பாரதூரமான குற்றவாளிகள்சுதந்திரமாக நடமாட இடமளித்துள்ள தற்போதைய அரசாங்கம், பௌத்தமதத்திற்காகவும், சிங்கள இனத்திற்காகவும் குரல்கொடுத்துவரும்ஞானாசார தேரர் போன்ற தலைமை பௌத்த பிக்குகளை விளக்கமறியலில் வைப்பதாக சத்தாதிஸ்ஸதேரர் குற்றம்சாட்டினார்.

அரசாங்கத்தின் இந்த செயல் நல்லதல்ல என்றுகுறிப்பிட்ட அவர் இதற்கான தண்டனையை அரசாங்கம் விரைவில் அனுபவிக்கும் என்றும்எச்சரித்தார்.

இதேவேளை விமல் வீரவன்ச தலைமையிலான தேசியசுதந்திர முன்னணியின் உப தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமரவீரகுறிப்பிடுகையில், ஞர்னாசார தேரர் ஏனைய கைதிகளைப்போல் நடத்தப்படுவதை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உடனடியாக சிறைச்சாலைகைதிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பௌத்த மதத்திற்கு மிகவும் மோசமான காலம் எழுந்துவிட்டதோ என்ற கவலை பௌத்தபிக்குகள் மத்தியில் எழுந்துள்ளதாக பௌத்த மதப் பீடங்களில் ஒன்றான சிறி ரோஹனபீடத்தின் துணை மகாநாயக்கத் தேரர் ஊமாரே கஸ்யப்ப தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கத்தின் பௌத்த பிக்குகளுக்கு எதிரானநடவடிக்கைகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளதுணை மகாநாயக்கத் தேரர், இந்த நடவடிக்கைகளுக்குஎதிராக பௌத்த பிக்குகள் கிளர்ந்தெழும் பட்சத்தில் அரசாங்கத்தால் அதனை தடுக்கமுடியாத துர்பாக்கிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதேவேளை பெவிதி ஹண்ட அமைப்பின் தலைவரானமொரத்தெட்டுவே ஆனந்த தேரர் சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதமொன்றில், ஞானாசார தேரரைபொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளார்.

எனினும் ஞானாசார தேரருக்கு எதிரானநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கும் பொதுபலசேனா அமைப்பு, சிறிலங்கா அரச தலைவரிடம் தாங்கள்ஞானாசார தேரரை விடுதலை செய்யுமாறு கெஞ்சப்போவதில்லை என்று திட்டவட்டமாகஅறிவித்துள்ளது.