மகிந்தவை முட்டாளாக்கியதைப் போல கூட்டமைப்பையும் முட்டாளாக்குகின்றார் மைத்திரி!-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவு போதும் இனியும் ஆதரவை வழங்குவதை விலக்கிக் கொள்ள வேண்டுமென கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பின் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
மகிந்தவை எப்படி மைத்திரி ஏமாற்றி முட்டாள் ஆக்கினாரோ அதே போன்று கூட்டமைப்பையும் ஏமாற்றி முட்டாளாக்குகின்ற செயற்பாட்டையே மைத்திரி தற்போது முன்னெடுத்து வருகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது விடயம் குறித்து குகதாஸ் மேலும் தெரிவித்திருப்பதாவது..
நல்லாட்சி அரசாங்கத்தின் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எப்படி முட்டையப்பம் சாப்பிட்டு, கூட இருந்த நண்பன் மகிந்தவை முட்டாள் ஆக்கினாரோ அதேபோல் நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கும் முண்டு கொடுத்த ஆழவைத்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும் முட்டாளாக்கியது மாத்திரம் அன்றி தான் ஒரு பச்சை இனவாதி என்பதையும் வெளிப்படுத்தி வருகின்றார்.
அத்தோடு சிறுபாண்மை இனங்களிடையே முரண்பாடுகள் தோன்றக் கூடிய வகையான செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக உருவாக்கி வருகின்றார்.
மேலும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் தற்போது புதிது புதிதாக பல்வேறு பிரச்சினைகளை உண்டு பண்ணுவதில் தற்போதைய மைத்திரி ரணில் கூட்டு அரசு தீவிரமாக உள்ளது.
இதற்கான காரணம் தமிழ் மக்களை இறுதித் தீர்வு விடையத்தில் இருந்து கவனத்தை திருப்புவதற்கே ஆகும்.
அதாவது நாளாந்தம் மக்கள் ஒவ்வொரு உள்ளூர் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக்கவும் ஆர்ப்பாட்டம், கவயீர்ப்பு, முற்றுகைப் போராட்டம் என மக்களை இந்த அரசும் துன்புறுத்த தொடங்கி விட்டது.
நில ஆக்கிரமிப்பு, கடற்றொழில் ஆக்கிரமிப்பு, கனிய மணல் அகழ்தல் மரம் வெட்டுதல், அத்துமீறிய குடியேற்றம், சிவில் நிர்வாகத்தில் இரானுவ தலையீடு, அரச ஊழியர்களாக சிங்களவரை தமிழர் பகுதியில் நியமித்தல், போதைப் பொருட்கள் கடத்தும் மையமாக வடக்கு மாற்றப்பட்டுள்ளமை, இவ்வாறு பல பிரச்சினைகள் கட்ட விழ்க்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் நல்லாட்சி அரசுக்கு மூன்று ஆண்டுகள் ஆதரவு கொடுத்து எமது ஐனநாயக விட்டுக்கொடுப்பை உலகிற்கும் சிங்கள தேசத்திற்கும் காட்டியுள்ளோம்.
ஆனாலும் கூட்டு அரசாங்கமோ தமிழர் விரோதப் போக்குடனே செயற்பட்டு வருகின்றது.
ஆகவே இதற்கு மேலும் அரசாங்கத்திற்கு ஆதரவாக தொடர்வது தமிழ மக்களின் தேசிய அபிலாசைகளை காட்டிக்கொடுப்பதாகவே அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Allgemein