இலங்கையில் ஏற்பட்ட குழப்பம்!

கம்பஹாவில் திடீரென ஏற்பட்ட புகை மண்டலத்தினால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டது.


பியகம பகுதியில் திடீரென புகைமூட்டம் ஒன்று ஏற்பட்டு வீதி முழுவதும் புகையினால் மூடியுள்ளது.

அண்மையில் பண்டாரவத்தை, பியகம, கடுவெல வீதியில் பண்டாரவத்தை சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று பார்த்த போது அது பேருந்தில் இருந்த வந்த புகை என தெரியவந்துள்ளது.

பேருந்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு புகைமூட்டமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

எனினும் திடீரென ஏற்பட்ட புகைமண்டலத்தை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேகக் கூட்டங்கள் திடீரென தரையிறங்கியதாக எண்ணிய பலரும் அதனை காணொளியாக பதிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.