தமிழர்களுடன் யுத்தம் செய்யத் தயார்!- சிறிலங்கா அமைச்சர் அறைகூவல்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது உயிர்நீத்த போராளிகளைநினைவுகூறுவதை நாட்டை பிளவுபடுத்துவதற்கான முயற்சியென்று அடையாளப்படுத்திய ஸ்ரீலங்காவின்தற்போதைய தேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவர் பாடடலி சம்பிக்க ரணவக்க, அவ்வாறானவர்களுடன்யுத்தமொன்றுக்கும் தயார் என்றும் சூளுரைத்துள்ளார்.

யாராவது பிரிந்து செல்லவோ அதற்காக யுத்தம் புரியவோ தயார்என்றால் அதற்கு அவ்வாறு பதிலளிக்கத் தாங்களும் தயார் என்று ஸ்ரீலங்காவின் பாரியதிட்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கின்றார்.

படுகொலைசெய்யப்பட்ட திம்புலாகல விகாரையின் தலைமை பிக்குவானகித்தலகம சீலாலங்கார தேரரின் 23 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு கொழும்பை அண்மித்தபகுதியான மஹாரகமவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அமைச்சர்பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க…

„சிலர் இன்று பயங்கரவாதிகளைநினைவுகூற முற்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளை நினைவுகூறும் அவர்கள் பயங்கரவாதிகளால்கட்டவிழ்த்துவிடப்பட்ட மிலேச்சத்தனமான செயற்களுக்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும்என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நாட்டில் நாம் அனைவரும் ஒன்றாக வாழவேண்டியது அவசியம். சகவாழ்வு அவசியம். ஆனால் யாராவது பிரிந்து செல்லவோ அதற்காகயுத்தம் புரியவோ தயார் என்றால் அதேபோல் முன்னைய பயங்கரவாதிகளின் பயங்கரவாதச்செயல்களை வீரதீர செயல்களாக கொண்டாட முற்படுவார்களானால், அதேபோல்பதிலளிக்க எமக்கும் நேரிடும்.

எமது நாட்டில் எதிர்காலத்திலும் மீண்டும் இவ்வாறானபிரச்சனைகளை ஏற்படுத்த பல தரப்பினர் முயற்சிக்கலாம். எனினும் கடந்தகாலசம்பவங்களின் பாடங்களைக் கற்றுக்கொண்டு மீண்டும் ஒரு இரத்த ஆறு ஓடாத வண்ணம் தடுப்பதற்குநடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரத்த ஆறு ஓடுவதை தடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுஅடிமைகளைப்போல் மண்டியிட்டுக்கொண்டு கடந்தகாலங்களில் சில தலைவர்கள் நடந்துகொண்டதுபோல் அடிம மனப்பான்மையுடன் செயற்பட வேண்டும் என்பது அல்ல. தைரியமாக எழுந்துநின்றுபயங்கரவாதத்திற்கு எதிராக போராடி உயிர்நீத்த பௌத்த தலைமை பிக்குகள், இராணுவத்தினர் உள்ளிட்ட அரச படையினரைப்போல் தைரியமாக முகம்கொடுத்துநாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்“ என்றார் அமைச்சர் சம்பிக்க.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பெயரைஉச்சரிப்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய அமைச்சர்சம்பிக்க, இதற்கு ஜேர்மனியை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும்என்றும் அவர் அங்கம்வகிக்கும் மைத்ரி – ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்குஆலோசணையும் முன்வைத்திருக்கின்றார்.

„பிரபாகரனின் எச்சங்கள் மீண்டும்ஆங்காங்கே முளைத்து வருகின்றன. அவை மீண்டும் பலமாக தலைதூக்குவதைத் தடுக்கநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமு். இதற்கு அவற்றை முளையிலேயே கிள்ளி எறியவேண்டியதுஅவசியம். இதற்கு ஏனைய நாடுகளிடமிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

எமக்குத்தெரியும் ஜேர்மனியில் இவ்வாறான நிலையொன்று ஏற்பட்டிருந்தது. அங்கு இன்றும்ஹிட்லரின் பெயரைக்கூட உச்சரிக்க முடியாது. அதேபோல் கம்போடிய போன்ற நாடுகளிலும்சர்வாதிகாரிகள் இருந்தனர். அவர்களின் பெயர்களையும் அந்த நாடுகளில் உச்சரிக்கமுடியாது. ஏனெனில் அந்த நாடுகள் அனைத்தும் சிந்திய இரத்தத்தினாலும், கண்ணீரினாலும்பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்கின்றன. துரதிஸ்டவசமாக எமது நாட்டில் பயங்கரவாதிகளைவிடுதலைப் போராட்ட வீரர்களாக நினைவுகூறுவதற்கு இடமளிப்பதன் ஊடாக நாம் பாரியத் தவறைஇழைக்கின்றோம். அதனால் இந்த நாட்டில் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெற்று சுதந்திரமாகவாழக்கூடிய ஒரு சூழலை கட்டியெழுப்புவதை தடுக்க செயற்படும் தரப்பினருக்கு எதிராகஇனமத பேதமின்றி அனைவரும் அணிதிரண்டு செயற்பட வேண்டிய காலகட்டம் எழுந்துள்ளது“ என்றும் தெரிவித்தார் சம்பிக்க ரணவக்க.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளைநடத்திய ஸ்ரீலங்காவின் தொன்பகுதியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் அனைவரும் அடிமைமனப்பான்மை கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்திய அமைச்சர் சம்பிக்க ரணவக்க தமிழீழவிடுதலைப் புலிகள் தொடர்பில் அவர்களுக்கு இருந்த அச்சமும் இதற்கு பிரதான காரணம்என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் தெளிவுபடுத்திய அமைச்சர் சம்பிக்க….

„எமது நாடு அடிமையாகிய ஒருநாடு. கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் உள்ள பொலிஸ்உத்தியோகத்தர்கள் அனைவரும் சரணடைந்த நாள் யூன் 11 ஆம் திகதி நினைவுகூறப்படவுள்ளது.இதற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ளன. அவர்கள் அனைவருக்கும் சரணடையுமாறு எத்தரவுகிடைத்ததும் அங்குள்ள தேக்குக் காட்டுக்குள் அழைத்துச்சென்று அந்த பொலிஸ்உத்தியோகத்தர்கள் அனைவரையும் படுகொலைசெய்தனர். அதேபோல் சமாதானம் என்ற பெயரில் பலசந்தர்ப்பங்களின் படிப்படியாக பயங்கரவாதிகளுக்கு அடிமைப்படுத்தப்பட்டோம்.

எமதுநாட்டின் ஜனாதிபதி ஒருவர் கொழும்பு நகரின் மத்தியில் வைத்து படுகொலைசெய்யப்பட்டார். ஆனாலும் நாம் பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்தத்தில் ஈடுபடஅஞ்சினோம். மற்றுமொரு ஜனாதிபதியை படுகொலைசெய்வதற்காக குண்டொன்றை வெடிக்க வைத்தனர்.எனினும் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பயந்தோம். இது வெட்கக்கேடானது.

அதேபோல் எனக்கு நினைவிருக்கின்றது எமது நாட்டில் இருந்த சிரேஷ்ட வெளிவிவகாரஅமைச்சரான லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட போது இன்று நாட்டை மீட்டதாகபெருமிதம் வெளியிட்டுவரும் தரப்பினர் சமாதானத்தை நிலைநாட்டுவது குறித்தேகதைத்தனர். தனது வெளிவிவகார அமைச்சர் படுகொலை செய்யப்பட்டிருந்த போதும்பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட வேண்டும் என்று கருதவில்லை. அதேபோல் நாட்டின்இராணுவத் தளபதி இராணுவத் தலைமையகத்திற்குள் வைத்து படுகொலை செய்ய முயற்சிமேற்கொள்ளப்பட்ட போதும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான யுத்தத்தை ஆரம்பிக்கமுன்வரவில்லை. சமாதானம் குறித்தே அப்போதும் கதைத்தனர். ஆனால் அடிமைமனப்பான்மையுடைய இந்த நாட்டு சமூகத்தை மாற்றி பௌத்த பிக்குகளின் ஆசீர்வாதத்துடன், இராணுவத்தினர்உட்பட படையினர் இறுதியில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்“ என்று தெரிவித்தார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.