புதையல் தோண்டியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கரடியனாறு எலிஸ்வேவ வனப்பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொஸ்லந்த, மொரவக்க, மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதோடு,
40, 50 மற்றும் 52 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகைள மேற்கொண்டு வருகின்றனர்.

தாயகச்செய்திகள்