வெளிநாட்டில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு ஆபத்து

வெளிநாடு ஒன்றில் தங்கியிருக்கும் 104 இலங்கையர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேல் நோக்கி பயணித்து தற்போது வீசா காலம் நிறைவடைந்துள்ள நிலையில் சட்டவிரோதமாக அங்கு தங்கியுள்ளவர்களுக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களில் 60 பேருக்கு நீதிமன்றம் சட்ட நடவடிக்கையினை முன்னெடுதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 30 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உலகச்செய்திகள்