வளர்முக நாடுகளின் சனநாயகப் பொறிமுறைகள்-வி.வாசுதேவன்

வளர்முக நாடுகளின் சனநாயகப் பொறிமுறைகள் மக்களிடையே பிரிவினைகளை மேன்மேலும் உருவாக்கி அவற்றின் பயன்பாட்டை தேர்தல் காலங்களில் அறுவடைசெய்துகொள்கிறார்கள்.
இந்த நிலையை சர்வதேசிய, குறிப்பாக மேலைநாட்டு அரசு சாரா நிறுவனங்கள் முறையாகப் பயன்படுத்தி உலக முதலாளித்துவத்தின் காவலர்களாகத் தொழிற்படுகின்றார்கள். (சில விதிவிலக்குகளும் உண்டு).
இலங்கை இதற்கு எவ்வித விதிவிலக்கும் அல்ல. குறைந்த பணத்துடன் பாரிய ஆய்வறிக்கைகளை அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கூடாக குறிப்பிட்ட நிறுவனங்கள் பெற்று அவற்றை நாட்டைச் சிதைப்பதற்காக அல்லது பயன்படுத்திக்கொள்வதற்காகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
பிரிவினைகளையும், குடிமக்களிடையே சமத்துவமின்மையையும் செயற்கையாக உருவாக்கிக் கொள்ளும் அனைத்து அரசாங்கங்ளும் இதற்கு வழிவகுக்கிறார்கள். அரசியல் கட்சிகள் இதற்கு வித்திடுகிறார்கள்.

வி.வாசுதேவன்

துயர் பகிர்தல்