இலங்கை மீது அமெரிக்காவின் மற்றுமொரு குற்றச்சாட்டு!

இலங்கையில் மத வழிபாட்டுத்தலங்கள் மீதும், மதத் தலைவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.


அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மதச் சுதந்திரம் பற்றிய வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும், வழிபாட்டு நிகழ்வுகள் மீது தாக்குதல் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டிலும் இலங்கையில் சிறுபான்மை மதத்தினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

உலகச்செய்திகள்