யாழில் ரணில் சென்ற ஹோட்டலை நோக்கி கல்வீச்சு!!

யாழில் ரணில் சென்றிருக்கும் ஹோட்டலை நோக்கி கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

யாழ் யூஎஸ் ஹோட்டலில் இரவு விருந்துக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடன் இணைந்த குழுவினர் சென்றிருந்தனர்.

அப்போது அந்த ஹோட்டலின் வெளிப்புறத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ் வருகை தந்துள்ள ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு யூஎஸ் ஹோட்டலில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இரவு விருந்துக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் இரவு 9.45 மணியளவில் யாழ்ப்பாண நகரத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

இந்த தருணத்திலேயே யூஎஸ் ஹோட்டலுக்கு வெளிப்புறத்தில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கல் வீச்சை மேற்கொண்டோர் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனினும் ஹோட்டல் மீது எந்த கல்வீச்சுத் தாக்குதலும் இடம்பெறவில்லை என நிர்வாகம் கூறியுள்ளது.
தாயகச்செய்திகள்