கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான பாரிய விமானம்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் விமானத்துடன் நீர் கொண்டு செல்லும் பவுசர் ஒன்று மோதியுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான A-320 எயார் பஸ் ரகத்திற்கு சொந்தமான விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த விமானம் இந்தியாவில் இருந்து பயண நடவடிக்கைகளை நிறைவு செய்து விட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

பின்னர் இந்த விமானத்திற்கு நீர் கொண்டு சென்ற பவுசர் ஒன்று அந்த விமானத்தின் பின் பக்கத்தில் மோதியுள்ளது. இதனால் ஒன்றரை கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நீர் பவுசரை செலுத்திய ஸ்ரீலங்கன் விமான சேவை சாரதி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சாரதி தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Allgemein