ஓடுதள விளக்கில் மோதிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்: பயணிகளின் நிலை..???

 

கேரளாவில் இருந்து இலங்கை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் காலநிலை மாற்றம் காரணமாக வழுக்கிச் சென்று அருகில் இருந்த மின்கம்பங்களில் மோதி விபத்துக்குள்ளானது.

கொச்சியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 227 பயணிகள், 12 பணியாளர்களுடன் நேற்று (27) மாலை UL 167 என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.

அப்போது அங்கு நிலவிய காலநிலை மாற்றம் காரணமாக வழுக்கிச் சென்று அருகில் இருந்த மின்கம்பங்களில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் பத்திரமாக தரை இறக்கப்பட்டனர்.

மேலும் யாருக்கும் எவ்வித பாதிப்புக்களும் இல்லை எனவும் சிறிது நேரத்திற்கு ஓடுதளம் மூடப்பட்டு, பின் நிலைமை சீரானதும் திறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த விபத்தில் விமானத்தின் சக்கரம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Allgemein