குப்பை கொட்டி மாட்டிக் கொண்ட நபர்கள்!

லண்டனில் பல தெருக்களில் தற்போது குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. வேற்று நாட்டவர்கள் லண்டனில் குடியேறி அவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக பெரும் குற்றச் சாட்டுகள் உள்ளது. இன் நிலையில் தம்பதிகள் தமது வீட்டு குப்பைகளை, வீதி ஓரமாக கொட்டிக் கொண்டு இருந்தவேளை. அவ்வழியே சென்ற நபர் ஒருவர் இதனை தனது மோபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டு.
இப்படி செய்யவேண்டாம், நான் பொலிசாருக்கு அறிவிப்பேன் என்று கூறி மிரட்ட. உடனே அவர்கள் சென்று தாம் எறிந்த குப்பைகளை மீண்டும் தமது காருக்குள் போட ஆரம்பித்துள்ளார்கள். லண்டனில் தெரு ஓரங்களில் குப்பை போடுவது சட்டப்படி குற்றம் ஆகும். இது இவ்வாறு இருக்க Fly tipping என்று கூறப்படும். தமது வீட்டு குப்பைகளை மற்றும் கழிவுகளை வீதி ஓரங்களில் போடுவது பெரும் குற்றச் செயல் ஆகும். இதற்கு 5,000 பவுண்டுகள் வரை தண்டம் வசூலிக்க முடியும் என்பது பலர் அறியாத விடையம்.

உலகச்செய்திகள்