
ஹெரோயின் விற்பனையில் சட்டவிரோதமாக ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்கள் மஸ்கெலியா – கித்துள்கல பகுயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா விஷேட அதிரடிப் படையினர் நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த ஐவரையும் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து ஒரு முச்சக்க வண்டியையும் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான ஐவரிடமிருந்து 27 ஹேரோயின் பக்கற்றுகள் கைப்பற்ற பட்டுள்ளதாகவும், மேலும் 5 பேரும் கித்துள்கல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளதாகவும் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.