தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் அமைதிப் போராட்டம்!

தூத்துக்குடி படுகொலையை கண்டித்து இன்று கிளிநொச்சியில்வடகிழக்கு புரட்சிகர இளையோர் பேரவை போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்புாது தூத்துக்குடி பகுதியில் உயிரிழந்த மக்களின் நினைவாக மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தினை கிளிநொச்சி மாவட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தளம் ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது குறித்த சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பல்வேறு வாக்கியங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடதக்கது.

உலகச்செய்திகள்