கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி கொண்ட போதைப்பொருள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி கொண்ட போதைப்பொருள் சுங்க அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டரை கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் மாலைதீவு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் வெளியேறும் முனையம் பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 2.39 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே இந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
33 வயதான இந்த மாலைதீவு பிரஜை தனது பயணப் பொதியில் மறைத்து வைத்து போதைப் பொருளை எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளார்.

Allgemein