லஞ்சம் வாங்கி அவுஸ்திரேலிய விசா கொடுத்த அதிகாரிகளுக்கு ஆப்பு!!

தென்னாபிரிக்காவிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலிய விசாவைப் பெற்றுக் கொள்வதற்காக நைஜீரிய நாட்டினர் இலஞ்சம் கொடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
இதனை அடுத்து இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை 21 நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அவுஸ்திரேலிய மாணவர் விசாக்களை முறைகேடாகப் பெற்றுள்ளனர் என The Herald Sun செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இடம்பெற்ற விசாரணையின் அடிப்படையில் தூதரக அதிகாரிகள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தில் பணிபுரியும் அவுஸ்திரேலிய பிரஜைகளற்ற இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்